அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங், உலக வங்கித் தலைவர் ரோபர்ட் சோய்லிக் மற்றும் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்களை இன்று சந்தித்தார்.
இதில் உலக வங்கித் தலைவருடன் நடந்த சந்திப்பில், நிதி தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் தங்கியுள்ள நியூயார்க் பேலஸ் விடுதியில் நடந்த இந்த சந்திப்பில் அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான ஆலோசனைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய திட்டக்கமிஷன் துணைத் தலைவர் எம்.எஸ்.அலுவாலியா, அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, இந்திய பொருளாதாரத்தை பெரியளவில் பாதிக்காது என தெரிவித்துள்ளார்.