திபெத்-நேபாள எல்லைப்பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 6 ஆக பதிவாகியுள்ளதாக அந்த மண்டல நிலநடுக்க கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
திபெத் தன்னாட்சிப் பகுதியின் (Xigaze prefecture) சோங்பா மாகாணத்தின் வடக்கே 122 கி.மீ தொலைவில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் 18 ஆயிரத்திற்கு அதிகமான மக்கள் வசிப்பதாக நிலநடுக்க கண்காணிப்பு மையத்தின் தலைவர் ஜு-குவான் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி சோங்பா மாகாணத்தில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் நிலநடுக்கத்தின் எதிரொலியாக ஏற்பட்ட பின்னதிர்வே இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் என்றும் ஜு-குவான் கூறியுள்ளார்.
இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 6.2 மையத்தில் மையம் கொண்டதாகவும், ரிக்டர் அளவில் இது 5.7 ஆக பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் மையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.