Newsworld News International 0809 25 1080925020_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பயங்கரவாத அச்சுறுத்தல்: இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையம் மூடல்!

Advertiesment
இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பெனாசிர் பூட்டோ சர்வதேச விமான நிலையம்
, வியாழன், 25 செப்டம்பர் 2008 (12:40 IST)
பாகிஸ்தான் விமான நிலையங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என்று வந்த தொலைபேசி அச்சுறுத்தலைத் தொடர்ந்து அந்நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தில் உள்ள பெனாசிர் பூட்டோ சர்வதேச விமான நிலையத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, அங்கிருந்த விமானப் பயணிகள், அவர்களின் உடமைகளுடன் பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கராச்சியை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு இன்று காலை வந்த அந்த தொலைபேசி அச்சுறுத்தலின் படி, இன்று நண்பகல்வாக்கில் நாட்டின் பல்வேறு விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டதாக விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.

இதையடுத்து இஸ்லாமாபாத் விமானநிலையம் மூடப்பட்டதாகவும், விமான நிலையத்தின் சுற்றுப்பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சகத்தின் தலைவர் ரஹ்மான் மாலிக், இஸ்லாமாபாத் விமான நிலையத்திற்கு தற்கொலைப்படை பயங்கரவாதிகள் யாரும் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

கடந்தாண்டு இறுதியில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரின் நினைவாக இஸ்லாமாபாத் விமான நிலையத்திற்கு இந்த ஆண்டின் துவக்கத்தில் பெனாசிர் பூட்டோவின் பெயர் சூட்டப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil