குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளவரும், அலாஸ்கா மாகாண கவர்னருமான சாரா பாலின், நியூயார்க்கில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார்.
சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பின் விவரம் பற்றி வெளியிடப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் குழு (UNGA) கூட்டத்தில் பங்கேற்க வந்திருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட உலக தலைவர்களுடன் பன்னாட்டு விவகாரங்கள் குறித்து சாரா பாலின் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி, ஜார்ஜியா, உக்ரைன் மற்றும் ஈராக் நாட்டு தலைவர்களையும் சாரா பாலின் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பு பற்றி கருத்து தெரிவித்த சாரா பாலின் உலகத் தலைவர்களுடனான இந்த சந்திப்பு மிகவும் தகவல் நிறைந்ததாக இருந்தது என்று குறிப்பிட்டார்.