Newsworld News International 0809 24 1080924074_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புவி ஆய்வு செயற்கைக்கோள் இந்தாண்டுக்குள் ஏவப்படும்: யு.ஏ.இ!

Advertiesment
துபாய் யுஏஇ ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செயற்கைக்கோள் SatrecI DubaiSat1 துபாய்சாட்1
, புதன், 24 செப்டம்பர் 2008 (17:57 IST)
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.) தனது முதல் புவி ஆய்வு செயற்கைக்கோளை இந்தாண்டு இறுதியில் ரஷ்ய ராக்கெட்டின் உதவியுடன் விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளது.

துபாய்சாட்-1 (DubaiSat-1) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புவி ஆய்வு செயற்கைக்கோள், தென்கொரியாவின் சட்ரேக்ஐ (SatrecI) நிறுவனத்தின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டது என்றும், மாஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கோஸ்மோட்ராஸ் (Kosmotras) என்ற பன்னாட்டு விண்வெளி நிறுவனத்த‌ி‌ன் உதவியுடன் இந்தாண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்றும் நவீன அறிவியில் மற்றும் தொழி‌ல்நுட்பத்திற்கான எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புவியை ஆய்வு செய்வதற்காக யு.ஏ.இ. சார்பில் விண்ணுக்கு அனுப்பப்படும் இந்த செயற்கைக்கோள் சிறியரக செயற்கைக்கோள் வரிசையில் மிகவும் நவீனமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil