Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தானில் ஆப்கன் தூதர் கடத்தல்: ஒருவர் சுட்டுக்கொலை!

Advertiesment
பாகிஸ்தானில் ஆப்கன் தூதர் கடத்தல்: ஒருவர் சுட்டுக்கொலை!
, திங்கள், 22 செப்டம்பர் 2008 (19:06 IST)
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முக்கிய நகரமான பெஷாவரில் காரில் சென்று கொண்டிருந்த அந்நாட்டுக்கான ஆப்கானிஸ்தான் தூதரை அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர்.

ஆப்கானிஸ்தான் தூதர் அப்துல் கலிக் பராஹி, தனது அலுவலகத்தில் இருந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டதாகவும், அவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காரின் ஓட்டுனர் உயிரிழந்ததாகவும் பாகிஸ்தானில் இயங்கி வரும் ஆப்கானிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் செய்தியாளரிடம் கூறுகையில், துப்பாக்கி ஏந்திய ஒருவன் காரை வழிமறித்து ஓட்டுனரை சுட்டுக் கொன்றதாகவும், பின்னர் காரில் இருந்த இருவரை கடத்திச் சென்றதாகவும் தெரிவித்தார். ஆனால் அவர் முழு விவரங்களையும் கூறும் முன்னர் காவல்துறையினர் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்று விட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil