Publish Date: Sat, 20 Sep 2008 (17:11 IST)
Updated Date: Sat, 20 Sep 2008 (17:07 IST)
பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்ததாக குற்றம் சாற்றி இந்திய மீனவர்கள் 13 பேரை அந்நாட்டு கடற்படை அதிகாரிகள் கைது செய்ததோடு, அவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
பாகிஸ்தானின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து நேற்று மாலை மீனவர்கள் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படை பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்த 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர் என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து மீன் பிடிக்க வேண்டாம் என்று இந்திய மீனவர்களுக்கு மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் திரும்பவும் பாகிஸ்தானின் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடிக்கின்றனர் என்றும் அந்த அறிக்கையில் குற்றம் சாற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள், மேல் விசாரணைக்காக கராச்சி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.