மேற்கு நேபாளம் தாடிங் மாவட்டத்தில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நேற்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 14 பேர் பலியானார்கள். இதில் 3 இந்தியர்களும் பலியான விவரம் தற்போது தெரியவந்துள்ளது.
பிர்குஞ்ச் பகுதியில் இருந்து காத்மாண்டு நோக்கி மலைப்பாதை வழியாக சென்ற பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பிரமோத் பட்டேல், லட்சுமண் குமார் குப்தா, ரமேஷ் மஹட்டோ என்ற 3 இந்தியர்களும் பலியானார்கள்.
மேலும், இந்த விபத்தில் 17 இந்தியர்களும் காயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.