Publish Date: Sat, 20 Sep 2008 (13:18 IST)
Updated Date: Sat, 20 Sep 2008 (13:18 IST)
நாடு முழுவதும் மத சுதந்திரத்தை இந்தியா பாதுகாக்க வேண்டும் என்று அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
அனைத்துக் கட்சிகளும் வன்முறைகளைத் தவிர்க்க வேண்டும். இந்தியா முழுவதும் மத சுதந்திரத்தை அரசு அதிகாரிகள் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, இந்தியாவின் நீண்டகால பண்பாடான மத சகிப்புத் தன்மையை கெடாமல் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக பன்னாட்டு மத சுதந்திரத்திற்கான தூதர் ஜான் ஹன்ஃபோர்டு கூறியுள்ளார்.
கடந்த ஒரு வார காலமாக ஒரிஸ்ஸா மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிக அளவு வன்முறைகள் வெடிப்பதாக கூறிய அவர், சமீபத்தில் நடந்த இந்த கலவரத்தில் இந்து மத முக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதற்கும் கவலை தெரிவித்துள்ளார்.