Publish Date: Fri, 19 Sep 2008 (13:25 IST)
Updated Date: Fri, 19 Sep 2008 (13:24 IST)
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 25 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 85 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வன்னேரிப் பகுதியில் நேற்று சிறிலங்கப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதலை நடத்தினர்.
இந்த மோதலில் 25 படையினர் கொல்லப்பட்டதுடன், 85 படையினர் படுகாயமடைந்துள்ளதாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
மேலும், கொல்லப்பட்டுள்ள படையினரின் 2 சடலங்கள், தப்பிச்சென்ற படையினர் விட்டுச்சென்ற பெருமளவிலான ஆயுதங்கள் ஆகியவற்றை விடுதலைப் புலிகள் கைப்பற்றி உள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.