Publish Date: Fri, 19 Sep 2008 (11:59 IST)
Updated Date: Fri, 19 Sep 2008 (11:53 IST)
நேபாளத்தில் தாடிங் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 26 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
பிர்குஞ்ச் பகுதியில் இருந்து காத்மாண்டு நோக்கி மலைப்பாதை வழியாக சென்ற பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆற்றில் கவிழ்ந்த பேருந்தில் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிர்பலி அதிகரிக்கும் என அந்நாட்டு காவல்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.