Publish Date: Thu, 18 Sep 2008 (13:53 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:29 IST)
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் இயங்கி வரும் பள்ளியில் உள்ள 300 குழந்தைகளை தலிபான் தீவிரவாதிகள் சிறைப்பிடித்துள்ளதாக அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் (North West Frontier Province) உள்ள திர் மாவட்டத்தில் இப்பள்ளி இயங்கி வந்ததாகவும், இங்கு அதிரடியாக நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்த குழந்தைகளை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்ததாகவும் பிடிவி (PTV) தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கும், தலிபான்களுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இந்நிகழ்வு குறித்து முழுமையான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.