Newsworld News International 0809 18 1080918023_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செப். 26க்குள் அணு சக்தி ஒப்பந்தம்: ரைஸ் நம்பிக்கை!

Advertiesment
செப் 26 அணு சக்தி ஒப்பந்தம் ரைஸ் நம்பிக்கை வாஷிங்டன் அமைச்சர் வயலார் ரவி
, வியாழன், 18 செப்டம்பர் 2008 (13:00 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் அமெரிக்க மேல் (செனட்) அவையில் இன்று ஆய்வுக்கு வரும் நிலையில், செப். 26ஆம் தேதிக்குள் இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் அனுமதி பெறப்படும் என அந்நாட்டு அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இந்திய அமைச்சர் வயலார் ரவி தலைமையில் அமெரிக்க சென்றுள்ள இந்திய அதிகாரிகளை சந்தித்த போது இதனைத் தெரிவித்த ரைஸ், இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி பெற இதுவரை புஷ் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் விளக்கியதாக கூறப்பட்டுள்ளது.

இந்திய அதிகாரிகளுடனான கூட்டத்திற்கு பின்னர் அமெரிக்க காங்கிரஸ் மாளிகைக்கு காண்டலீசா ரைஸ் சென்றுள்ளதாகவும், அங்கு அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவு கோரி அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கடந்த சில நாட்களாக அவர் நடத்தி வரும் பேச்சுவார்த்தை தொடர்ந்ததாகவும் அமெரிக்க அரசின் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒ‌த்துழை‌ப்பு ஒப்பந்தத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற காண்டலீசா ரை‌ஸ் மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் 26ஆம் தேதிக்குள் அனுமதி கிடைத்துவிடும் எனத் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டம் வரும் 26ஆம் தேதி நிறைவடைகிறது. இதற்கிடையில் இன்று அந்நாட்டு மேல் அவையில் விவாதத்திற்கு வரும் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து கிறிஸ்டோபர் ஜோன்ஸ் தலைமையிலான உறுப்பினர்கள் குழு விவாதிக்க உள்ளது.

ஒருவேளை அமெரிக்க பிரதிநிதிகள் சபை மற்றும் மேல் சபையில் வரும் 26ஆம் தேதிக்குள் இந்த ஒப்பந்தத்திற்கு அனுமதி கிடைக்காவிட்டால், நவம்பரில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்கு முன்பாக நடக்கும் குறுகியகால நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த ஒப்பந்தம் மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக ரைஸ் உடனான சந்திப்பின் போது இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து விரிவாக விவாதித்த அமைச்சர் வயலார் ரவி, ஏமன் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வயலார் ரவி, இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இந்தியாவின் எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்புடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார். எரிசக்தி பாதுகாப்பே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil