Publish Date: Tue, 16 Sep 2008 (20:39 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:29 IST)
இலங்கையில் சிறிலங்க விமானப்படை நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலியாகியுள்ளதுடன், மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வவுனியாவில் முறிகண்டிப் பகுதியில் இன்று காலை 10.10 மணியளவில் சிறிலங்க விமானப்படை விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன.
இந்தத் தாக்குதலில் பொன்னுத்துரை சுவிந்தன் (17), கணபதிப்பிள்ளை திருநாவுக்கரசு (60), தங்கராசா ஜெசீவன் (22) ஆகிய பொது மக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்று புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
இந்தத் தாக்குதலை உறுதி செய்துள்ள சிறிலங்க ராணுவம், பலி விவரம் தொடர்பாக எதையும் தெரிவிக்கவில்லை.
Webdunia
Publish Date: Tue, 16 Sep 2008 (20:39 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:29 IST)