பஹ்ரைனில் கட்டுமான பணிகள் நடந்து வந்த ஒரு கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில், அங்கு வேலை செய்து வந்த இந்திய தொழிலாளி ஒருவர் பலியானர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
சல்மாபாத் என்னுமிடத்தில் உள்ள இந்த கட்டடத்தில் தண்ணீர் குழாய் பொறுத்தும் பணியில் தேவேந்திரா (27) என்ற இந்திய இளைஞர் உள்பட 3 பேர் வேலை செய்து வந்தனர். அப்போது அந்த கட்டடத்தின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
இதில் அந்த மூவரும் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். இதையடுத்து மீட்பு குழுவினர் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து இடிபாடுகளுக்கு சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுவர் இடிந்து விழுந்ததில் இந்தியரான தேவேந்திரா உடல் நசுங்கி பலியானார்.
உடன் வேலை செய்து வந்த கங்காய்யா (30), பாலா லிங்கம் (40) என்ற மற்ற இருவரும் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.