கிழக்கு தைமூரில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 6.2 ஆக பதிவாகியுள்ளது.
தலைநகர் 'டிலி'க்கு கிழக்கே 148 கி. மீ. தொலைவிலும், இந்தோனேஷியாவின் குப்வாங் நகரின் வடகிழக்கே 397 கி.மீ. தொலைவிலும் கடலுக்கு அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
கடலுக்கடியில் சுமார் 35 கி.மீ. ஆழத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தால் ஆழிப்பேரலை முன்னெச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம், பொருட்சேதம் பற்றி உடனடியாக தகவல் எதுவும் இல்லை.