Publish Date: Sun, 14 Sep 2008 (11:51 IST)
Updated Date: Sun, 14 Sep 2008 (11:50 IST)
மத்திய ரஷ்யாவில் இன்று காலை பயணிகள் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 88 பேர் பலியானார்கள்.
ரஷ்ய தலைநகர் மாஷ்கோவில் இருந்து பெர்ம் என்ற இடத்தை நோக்கிச் சென்ற போயிங் 737 என்ற இந்த விமானம் காலை 3.40 மணியளவில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானத்தில் 7 குழந்தைகள் உள்பட 82 பயணிகள், மற்றும் விமான ஒட்டிகள் 6 பேர் இருந்தனர்.
பெர்ம் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய இந்த விமானம் அதன் அருகே வந்து கொண்டிருந்த போது அருகிலுள்ள மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதியில் விழுந்து நொறுங்கியது.
இதையடுத்து மீட்பு குழுவினர் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.