Publish Date: Sat, 13 Sep 2008 (13:20 IST)
Updated Date: Sat, 13 Sep 2008 (13:20 IST)
துபாயில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான 2 இந்தியர்களைப் பற்றிய விவரம் தெரிய வந்துள்ளது.
துபாயில் கடந்த 3ஆம் தேதி ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 2 இந்தியர்கள் உள்பட 7 பேர் பலியானார்கள். இதில் பலியான 2 இந்தியர்கள் பற்றிய விவரம் தற்போது தெரியவந்துள்ளது.
பலியான 2 இந்தியர்களில் ஒருவர் பெயர் ஜூலியஸ் அலெக்ஸ் பெரைரா என்றும் அவர் அங்குள்ள துளையிடும் (டிரில்லிங்) நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார் என்றும் மற்றொருவர் பெயர் ஜெயந்த் இங்கேல் என்றும் அவர் பேக்கர் ஹக்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் என்றும் அவர்கள் இருவரும் 4 வெவ்வேறு நிறுவனங்களுக்காக பணியாற்றி வந்தனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது பற்றிய தகவல் 2 இந்தியர்களின் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் பலியானவர்களின் உடல்கள் விரைவில் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர்கள் பணியாற்றி வந்த நிறுவனம் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளது.