Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

123 ஒப்பந்தம்: அதிபர் புஷ் விளக்கம்!

123 ஒப்பந்தம்: அதிபர் புஷ் விளக்கம்!
, வியாழன், 11 செப்டம்பர் 2008 (21:26 IST)
இ‌‌ந்‌திய- அமெ‌ரி‌க்க அணு ச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பை நடைமுறைப்படுத்த வழிவகுக்கும் 123 ஒ‌ப்ப‌ந்த‌த்தை நிறைவேற்றிததருமாறு அமெரிக்க நாடாளுமன்றத்தை கேட்டுக்கொண்டு அதிபர் புஷ் அனுப்பியுள்ள தீர்மான வரைவின் விவரம் வருமாறு:-

’திரு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ள, 1954ஆ‌ம் ஆ‌ண்டு அணு ச‌க்‌தி ச‌ட்ட‌‌த்‌தி‌ன் 123 ஆவது பி‌ரி‌வி‌ன்படி, ஆ‌க்கபூ‌ர்வமான தேவைகளு‌க்கு அணு ச‌க்‌தியை‌ப் ப‌ய‌ன்படு‌த்‌துவ‌து தொட‌ர்பாக அமெ‌ரி‌க்க அர‌சி‌ற்கு‌ம் இ‌ந்‌திய அர‌சி‌ற்கு‌ம் இடை‌யி‌ல் ப‌ரி‌ந்துரை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள பர‌ஸ்பர ஒ‌‌த்துழை‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌த்‌தை நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன் ஒ‌ப்புத‌லி‌ற்கு தா‌ழ்மையுட‌ன் அனு‌ப்‌பி வை‌க்‌கிறே‌ன்.

மே‌ற்க‌ண்ட ஒ‌ப்ப‌ந்த‌‌ம் கு‌றி‌த்த எனது கரு‌த்து, ஒ‌ப்ப‌ந்த‌த்தை நடைமுறை‌ப்படு‌த்த நா‌ன் வழ‌ங்‌கியு‌ள்ள ஒ‌ப்புத‌ல், இ‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌ம் தொட‌ர்பான வகை‌ப்படு‌த்த‌ப்படாத அணு ஆயுத‌ப் பரவ‌ல் ம‌தி‌ப்‌பீ‌ட்டு அ‌றி‌க்கை (Nuclear Proliferation Assessment Statement (NPAS)) ஆ‌கியவ‌ற்றையு‌ம் நா‌ன் சம‌ர்‌ப்‌பி‌க்‌கிறே‌ன்.

(அயலுறவு மறுக‌ட்டமை‌ப்பு, புது‌‌ப்‌பி‌த்த‌ல் ச‌ட்ட‌ம் 1998 (பொது ச‌ட்ட‌ம் 105- 277)-இ‌ன் XII ஆவது தலை‌ப்‌பி‌ன்படி, அணு ச‌க்‌தி ச‌ட்ட‌த்‌தி‌ன் 123ஆவது ‌பி‌ரி‌வி‌ன் துணையுட‌ன், தே‌சிய புலனா‌ய்வு‌க் கழக‌ இய‌க்குந‌ரி‌ன் ஆலோசனையுட‌ன் தே‌சிய ஆலோசனை‌ச் செயல‌ர் தயா‌ரி‌த்து‌ள்ள, வகை‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட NPASஇ‌‌ன் ‌விவர‌ங்க‌ள் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் த‌னியாக‌ச் சம‌ர்‌‌ப்‌பி‌க்க‌ப்படு‌ம்).

அணு ச‌க்‌தி ஒழு‌ங்குமுறை ஆணைய‌த்‌தி‌ன் கரு‌த்து‌க்களை‌த் தெ‌ரி‌வி‌க்க‌க்கூடிய அ‌ந்த ஆணைய‌த் தலைவ‌ரி‌ன் கடித‌ம், எ‌ன்‌னிட‌ம் சம‌ர்‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்ட எ‌ரிச‌க்‌‌தி செயல‌ர் ம‌ற்று‌ம் தே‌சிய‌ச் செயல‌ர் ஆ‌கியோ‌ர் இணை‌ந்து தயா‌ரி‌த்த கூ‌ட்டு அ‌றி‌க்கை ஆ‌கியவ‌ற்றையு‌‌ம் இ‌த்துட‌ன் இணை‌த்து‌ள்ளே‌ன்.

அணு ச‌க்‌தி ச‌ட்ட‌ம் ம‌ற்று‌ம் அணு ச‌க்‌தி தொட‌ர்புடைய ‌பிற ச‌ட்ட‌ங்க‌ளி‌ன் ‌கீ‌ழப‌‌ரி‌ந்துரை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ஒ‌ப்ப‌ந்த‌‌ம் கு‌றி‌த்து ‌விவா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. நா‌ன் ‌வில‌க்‌கு அ‌ளி‌த்து‌‌ள்ள- ‌கீழே ‌விவ‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌பி‌ரிவு 123 a(2)ஐ‌த் த‌விர அணு ச‌க்‌‌தி ச‌ட்ட‌த்‌தி‌ன் இதர எ‌ல்லா‌ப் ‌பி‌ரிவுக‌ளி‌ன் கு‌றி‌க்கோ‌ள்களையு‌ம் ஒ‌ப்ப‌ந்த‌ம் பூ‌ர்‌த்‌தி செ‌ய்‌கிறது எ‌ன்பதே எனது முடிவாகு‌ம்.

இ‌ந்‌தியாவுட‌ன் ஆ‌க்கபூ‌ர்வமான வ‌ழிக‌ளி‌ல் அணு ச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு மே‌ற்கொ‌ள்ள‌த் தேவையான ஒரு‌ங்‌கிணை‌க்க‌ப்‌ப‌ட்ட க‌ட்டமை‌ப்பை அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு இ‌‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌ம் வழ‌ங்கு‌கிறது. தகவ‌ல் ப‌ரிமா‌ற்ற‌ம், அணு ச‌க்‌தி தொட‌ர்ப‌‌ற்ற பொரு‌ட்க‌ள், அணு எ‌ரிபொரு‌ள், உபகரண‌ங்க‌ள் (உலைக‌ள் உ‌ட்பட), அணு ஆரா‌ய்‌ச்‌சி ம‌ற்று‌ம் அணு ‌மி‌ன்சார‌ம் தயா‌ரி‌ப்பத‌ற்கு‌த் தேவையான உபகரண‌ங்க‌ள் ஆ‌கியவ‌ற்றை ப‌ரிமா‌றி‌க்கொ‌ள்ள இ‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌ம் அனும‌தி‌க்‌கிறது.

அணு சக்தித் தொடர்பான வெ‌ளி‌யிடக்கூடாத எ‌ந்த‌த் தகவ‌ல்களையு‌ம் ப‌ரிமா‌றி‌க்கொ‌ள்ள இ‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌ம் அனும‌தி‌க்க‌வி‌ல்லை. ஒ‌ப்ப‌ந்த‌ம் ‌திரு‌த்த‌ப்ப‌ட்டா‌ல் த‌விர, கடின ‌நீ‌ர் தயா‌ரி‌ப்பு‌த் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்(Heavy Water technology),

தயா‌ரி‌ப்பு வச‌திக‌ள், நுணுக்கமான அணுத் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம், நுணுக்கமான அணுக் கரு‌விக‌ள், அ‌ந்த‌க் கரு‌விகளு‌க்கான மு‌க்‌கிய உபகரண‌ங்‌க‌ள் ஆ‌கியவ‌ற்றை ப‌ரிமா‌றி‌க்கொ‌ள்ள இ‌‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌‌ம் அனும‌தி‌க்காது.

மொ‌த்த அள‌வி‌ல் 20 ‌விழு‌க்கா‌ட்டி‌ற்கு‌ம் மே‌ல் க‌தி‌ரிய‌க்க ஐசோடோ‌ப்பு 235 இ‌ல்லாத யுரே‌னிய‌‌ம் செ‌றிவூ‌ட்ட‌ப்படுவதை இ‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌ம் அனும‌தி‌க்‌கிறது. இதே க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ன் ‌கீ‌ழ் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்ட அணு எ‌ரிபொருளை மறுசுழ‌ற்‌சி (Reprocessing) செ‌ய்வது ம‌ற்று‌ம் அணு எ‌ரிபொரு‌‌ள் அட‌ங்‌கிய பொரு‌ட்களை‌ப் பய‌ன்படு‌த்துவது ஆ‌கியவ‌ற்றையு‌ம் இது அனும‌தி‌க்‌கிறது.

ப‌ன்னா‌ட்டு அணு ச‌க்‌தி முகமை‌யி‌ன் (IAEA) க‌ண்கா‌ணி‌ப்பு ‌வி‌திக‌ளி‌ன் ‌கீ‌ழ் முழுமையாக மறுசுழ‌ற்‌சி‌ப் ப‌ணிகளு‌க்கு எ‌ன்றே உருவாக்கப்படும் தேச அள‌விலான பு‌திய மறுசுழ‌ற்‌சி மையத்தை ‌நிறுவு‌ம் வரை மறுசுழ‌ற்‌சி- அது தொட‌ர்பான ப‌ணிக‌ள் நட‌க்கு‌ம் இட‌‌த்‌தி‌ல் இரு நாடுகளு‌ம் ஒ‌ப்பு‌க்கொ‌ள்ளு‌ம் வகை‌யிலான ஏ‌ற்பாடுகளை செ‌ய்யு‌ம் வரை இ‌ந்‌தியா மே‌ற்க‌ண்ட உ‌ரிமைகளை‌ப் பெற முடியாது.

இ‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன் ‌பி‌ரிவு 5(6) கூறு‌ம், இ‌ந்‌தியா‌வி‌ற்கு தடை‌யி‌ன்‌றி எ‌ரிபொரு‌ள் வழ‌ங்குவது தொட‌ர்பாக தர‌ப்ப‌ட்டு‌ள்ள ‌சில அர‌சிய‌ல் உறு‌திமொ‌‌ழிக‌ள், ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன் க‌ட்டமை‌ப்‌பி‌ன்படி, அமெ‌ரி‌க்கா‌வி‌ன் இதர ஒ‌ப்ப‌ந்த‌ங்களை‌ப் போலவே, சட்டப்பூர்வமானது அல்ல.

இ‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌ம் 40 ஆ‌ண்டு கால‌த்‌தி‌ற்கு அம‌லி‌ல் இரு‌க்கு‌ம். ‌ஒ‌ப்ப‌ந்த‌த்தை மு‌றி‌த்து‌க்கொ‌ள்ள விரு‌ப்ப‌‌ப்படு‌ம் தர‌ப்பு எ‌தி‌ர்‌த் தர‌ப்‌பி‌ற்கு‌, ஒ‌ப்ப‌ந்த‌ம் முடியு‌ம் கால‌த்‌தி‌ற்கு 6 மாத‌ங்களு‌க்கு மு‌ன்பு தா‌க்‌கீது கொடு‌க்காத வரை, இ‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌ம் கூடுதலாக ஒ‌வ்வொரு முறை‌யு‌ம் 10 ஆ‌ண்டுக‌ள் என்ற அளவில் ‌நீ‌ட்டி‌க்க‌ப்படு‌ம்.

மேலு‌ம், ஒ‌ப்ப‌ந்த‌ம் அம‌லி‌ல் இரு‌க்கு‌ம் கால‌த்‌தி‌ல் எ‌ந்த‌த் தர‌ப்பு‌ம் எ‌தி‌ர்‌த் தர‌ப்‌பி‌ற்கு ஒரு ஆ‌ண்டிற்கு மு‌ன்‌பு எழு‌த்துபூ‌ர்வமாக‌த் தா‌க்‌கீது கொடு‌த்து‌வி‌ட்டு ஒ‌ப்ப‌ந்த‌த்தை மு‌றி‌த்து‌க்கொ‌ள்ள இர‌ண்டு தர‌ப்‌பி‌ற்கு‌ம் உ‌ரிமை உ‌‌ள்ளது.

பிர‌ச்சனைக‌ளை முறையான பே‌ச்‌சி‌ன் மூல‌ம் ‌தீ‌ர்‌த்து‌க்கொ‌ள்ள முடியா‌விடி‌ல், ஒ‌ப்ப‌ந்த‌ம் மு‌றிவத‌ற்கு மு‌ன்னதாகவே, அத‌ன் ‌வி‌திக‌ளி‌ன்படி வழ‌ங்க‌ப்படு‌ம் ஒ‌த்துழை‌ப்பை உடனடியாக ‌நிறு‌த்‌த, ஒ‌ப்ப‌ந்த‌த்தை மு‌ன்னதாகவே மு‌றி‌த்து‌க்கொ‌ள்ள ‌விரு‌ம்பு‌‌ம் தர‌ப்‌பி‌ற்கு உ‌ரிமை உ‌ள்ளது.

ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன் ‌வி‌திகளு‌க்கு உ‌ட்ப‌ட்டு வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ள அணு எ‌ரிபொரு‌ள் ம‌ற்று‌ம் உபகரண‌ங்க‌ளி‌ன் ‌மீதான மு‌‌க்‌கியமான அணு ஆ‌யுத‌ப் பரவ‌ல் தடு‌ப்பு ‌நிப‌ந்தனைகளு‌ம் க‌ட்டு‌ப்பாடுகளு‌ம், இ‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌ம் மு‌றியு‌ம் சமய‌த்‌திலு‌ம் தொடரு‌ம்.

இ‌ந்‌தியா‌வி‌ன் சமூக‌ப் ப‌ய‌ன்பா‌ட்டி‌ற்கான அணு ச‌க்‌தி‌த் ‌தி‌ட்ட‌ங்க‌ள், ராணுவ அணு ச‌க்‌தி‌த் ‌தி‌ட்ட‌ங்க‌ள், அணு ஆயுத‌ப் பரவ‌‌ல் தடு‌ப்பு‌க் கொ‌ள்கைக‌ள் ம‌ற்று‌ம் நடவடி‌க்கைக‌ள் ஆ‌கியவை கு‌றி‌த்து ‌விவா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌விவர‌ங்க‌ள் ‌வி‌‌ரிவாக NPASஇ‌ல் தர‌ப்ப‌ட்டு‌ள்ளன. வகை‌ப்படு‌த்த‌ப்ப‌ட்ட NPAS நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் த‌னியாக‌ச் சம‌ர்‌ப்‌பி‌க்க‌ப்படு‌ம்.

அணு ச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு தொட‌ர்பாக அணு ச‌க்‌தி‌ ச‌ட்ட‌த்‌தி‌ல் கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌வி‌திமுறைக‌ளி‌ல் ‌சில அணு ஆயுதம‌ற்ற நாடுகளு‌க்கு ம‌ட்டுமே பொரு‌ந்து‌ம் (பா‌ர்‌க்க AEA ‌பி‌ரிவு 123a). 1967 ஜனவ‌ரி 1ஆ‌ம் தே‌தி‌ முத‌ல் அணு கு‌ண்டு அ‌ல்லது அது தொட‌ர்பான வெடி பொரு‌ட்களை‌த் தயா‌ரி‌த்து‌ள்ள ம‌ற்று‌ம் வெடி‌த்து‌ள்ள நாடுக‌ள் "அணு ஆயுத நாடுக‌ள்" எ‌ன்று அணு ஆயுத‌ப் பரவ‌ல் தடு‌ப்‌பு உட‌ன்படி‌க்கை (NPT) கூறு‌ம் வரையறையை அணு ச‌க்‌தி ச‌ட்டமு‌ம் ஏ‌ற்று‌க்கொ‌ள்‌கிறது.

இ‌ந்‌தியா அணு ஆயுத‌ங்களை வை‌த்‌திரு‌ந்தாலு‌ம் கூட, NPT ம‌ற்று‌ம் அணு ச‌க்‌தி ச‌ட்ட‌த்‌தி‌ன் நோ‌க்க‌த்‌தி‌ன்படி அதை ஒரு அணு ஆ‌யுதம‌ற்ற நாடு எ‌ன்றே கருத வே‌ண்டு‌ம். இ‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌ம் அணு ச‌க்‌தி ச‌ட்ட‌த்‌தி‌ன் 123 ‌பி‌ரி‌வி‌ன் நோ‌க்க‌ங்க‌ள் முழுவதையு‌ம்- ‌பி‌ரிவு 123 a(2)-ஐ‌த் த‌விர- ‌நிறைவு செ‌ய்‌கிறது. IAEA க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ற்கு உ‌ட்ப‌ட்டு முழுமையான க‌ண்கா‌‌ணி‌ப்‌பி‌‌ன் ‌கீ‌ழ் இ‌ந்‌தியா தனது அணு ச‌க்‌தி தொட‌ர்பான நடவடி‌க்கைகளை மே‌ற்கொ‌ள்ளு‌ம் எ‌ன்பதா‌ல், ‌பி‌ரிவு 123 a(2)வை‌த் த‌வி‌ர்‌த்து ‌வி‌ட்டு இ‌ந்‌தியாவுட‌ன் அமெ‌ரி‌க்கா ஒ‌த்துழை‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌ம் மே‌ற்கொ‌ள்ளலா‌ம்.

மேலு‌ம், அணு எ‌ரிபொரு‌‌ள் வழ‌ங்குத‌ல் தொ‌ட‌ர்பாக அணு ச‌க்‌தி ச‌ட்ட‌‌த்‌தி‌ன் - ‌பி‌ரிவு 123 a(2) உ‌ட்பட- எ‌ல்லா‌ப் ‌பி‌ரிவுக‌ளி‌ன் கு‌றி‌க்கோ‌ள்களு‌ம் ‌நிறைவு செ‌ய்ய‌ப்படுவதை ஹெ‌ன்‌றி ஹை‌ட் அமெ‌ரி‌க்கா- இ‌ந்‌தியா ஆ‌க்கபூ‌ர்வ அணு ச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு‌ச் ச‌ட்ட‌ம் 2006 (ஹை‌ட் ச‌ட்ட‌ம்) உறு‌தி செ‌ய்‌கிறது. அது தொட‌ர்பான ‌வி‌திமுறைகளையு‌ம் ‌வில‌க்குக‌ள் தொ‌ட‌ர்பான ‌விள‌க்க‌ங்களு‌க்கு‌த் தேவையான ஆவண‌ங்களையு‌ம் இ‌த்துட‌ன் இணை‌த்து‌ள்ளே‌ன்.

இ‌ந்த ப‌ரி‌ந்துரை‌க்க‌ப்ப‌ட்ட ஒ‌ப்ப‌ந்த‌ வரைவு‌ ஒ‌ப்புதலை‌ப் பெறுவதை‌த் தொட‌ர்‌ந்து, இ‌ந்‌திய‌ப் ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கு‌ம் நானு‌ம் 2005, ஜூலை 18இ‌ல் அ‌றி‌வி‌த்து- 2006, மா‌ர்‌ச் 2 இ‌ல் உறு‌தி செ‌ய்த இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்க சமூக‌ப் பய‌ன்பா‌ட்டி‌ற்கான அணு ச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌‌ம் கையெழு‌த்‌திட‌ப்ப‌ட்டு நடைமுறை‌க்கு‌‌க் கொ‌ண்டு வர‌ப்படு‌ம்.

இ‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌ப்படி இ‌ந்‌‌தியா‌வி‌ற்கு‌ம் அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு‌ம் இடை‌யி‌ல் அணு ச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு துவ‌ங்‌கினா‌ல், மே‌ம்படு‌த்த‌ப்ப‌ட்ட எ‌ரிச‌க்‌தி‌‌ப் பாதுகா‌ப்பு, சு‌ற்று‌ச்சூழ‌ல் சா‌ர்‌ந்த எ‌ரிச‌க்‌தி‌ப் பாதுகா‌ப்பு, ‌மிக‌ப்பெ‌ரிய பொருளாதார‌ வா‌ய்‌ப்புக‌ள், அணு ஆயுத‌ப் பரவ‌ல் தடு‌ப்பை உறு‌தி‌ப் படு‌த்து‌ம் முய‌ற்‌சிகளு‌க்கான பல‌ன்க‌ள் ஆ‌கியவை உ‌ள்‌ளி‌ட்ட ‌மிக‌ப்பெ‌ரிய பாதுகா‌ப்‌பு ம‌ற்று‌ம் பொருளாதார‌ப் பல‌ன்க‌ள் இரு நாடுகளு‌க்கு‌ம் ‌கிடை‌க்கு‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil