Publish Date: Thu, 11 Sep 2008 (18:00 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் சிறிலங்க சிறப்பு அதிரடிப்படையினர் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பகுதியில் உள்ள சிறிலங்க சிறப்பு அதிரடிப்படை முகாமில் இருந்து சுற்றுக்காவல் பணிக்குச் சென்று கொண்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினர் மீது நேற்று மாலை 5.30 மணியளவில் விடுதலைப் புலிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
கிளிபாய்ந்தகல் பாலம் அருகில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சிறப்பு அதிரடிப்படையினர் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மூன்றுபேர் காயமடைந்துள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
இதுகுறித்து சிறிலங்கப் படைத் தரப்பில் இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.