Publish Date: Wed, 10 Sep 2008 (15:03 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:43 IST)
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள சினாபாங் நகரில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் இதில் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடித் தகவல் வெளியாகவில்லை.
அந்நாட்டு நேரப்படி காலை 10 மணியளவில் (இந்திய நேரப்படி காலை 8.30) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளதாக இந்தோனேஷிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து 11 மணியளவில் (இந்திய நேரம் காலை 9.32) மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.