இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த நடந்த மோதல்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 155 படையினர் பலியாகியுள்ளதுடன், 983 படையினர் காயமடைந்துள்ளதாக சிறிலங்க அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் நெருக்கடி நிலையை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் பேசிய சிறிலங்கப் பிரதமர் ரட்னசிறீ விக்ரமநாயக, விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கப் படையினர் கடுமையான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினாரென்று செய்திகள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாணத்தில் சட்டம்- ஒழுங்கை அமல்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினர், விடுதலைப் புலிகளுடன் போரிட்டு மக்களை விடுவிக்க முயற்சித்து வருகின்றனர் என்று பிரதமர் கூறியுள்ளார்.