பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரிக்கு நெருங்கிய நண்பரும், அரசியல்வாதியுமான அப்துல்லா ஹுசைன் ஹாரூன் ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தான் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அப்பொறுப்பு வகித்து வந்த முனிர் அக்ரம் என்பவருக்குப் பதிலாக ஹாரூன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், மக்கள் கட்சித் தலைவருமான பெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த தனி ஆணையம் நியமிக்க ஐக்கிய நாடுகள் சபையிடம் கேட்டது தொடர்பாக ஜர்தாரிக்கும், ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதராக பதவி வகித்து வந்த முனிர் அக்ரமுக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதன் காரணமாக முனிர் அக்ரமின் ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.