வருகிற ஜனவரி மாதம், அதாவது தனது பதவிக் காலம் முடிவதற்குள் இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றுவிட முடியும் என்று அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த அமெரிக்க தேசியப் பாதுகாப்புக் கழகத்தின் பேச்சாளர் கார்டன் ஜான்ட்ரூ, "அணு சக்தி ஒப்பந்தத்திற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற நாங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். எங்களுக்கு நம்பிக்கை உள்ளது" என்றார்.
இந்தியா அணு ஆயுதச் சோதனை நடத்தினால் அணு சக்தி ஒப்பந்தம் ரத்தாகிவிடுமா என்று கேட்டதற்கு, "அணு ஆயுதச் சோதனை நடத்தினால் சர்வதேச நாடுகளின் பதில் என்னவாக இருக்கும் என்று இந்தியாவிற்குத் தெரியும்." என்றார் அவர்.