Publish Date: Tue, 09 Sep 2008 (14:15 IST)
Updated Date: Tue, 09 Sep 2008 (14:14 IST)
வன்னியில் உள்ள சிறிலங்கப் படையினரின் கூட்டுத் தலைமையகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராடார் ஆபரேட்டர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
வன்னியில் உள்ள சிறிலங்கப் படையினரின் கூட்டுத் தலைமையகம் மீது இன்று அதிகாலை 2 மணி நேரத்திற்கும் மேலாக விடுதலைப் புலிகள் நடத்திய தரைவழி, வான்வழித் தாக்குதல்களில் 12 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 26 படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுதவிர இந்திய ராடார் ஆபரேட்டர்கள் இருவரும் காயமடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக கொழும்புவிற்கு விமானம் மூலம் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.