Publish Date: Sun, 07 Sep 2008 (13:22 IST)
Updated Date: Sun, 07 Sep 2008 (13:21 IST)
இலங்கையில் சிறிலங்கப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள தாலிக்குளம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர்களை சிறிலங்கா படையினர் சுட்டுக்கொன்றனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
கொல்லப்பட்ட ஐந்து பேரின் உடல்களும் வவுனியா மருத்துவமனையில் நேற்று காலை ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வவுனியா மாவட்ட நீதிபதி ஏ.யூட்சன் விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையில், கொல்லப்பட்ட ஐந்து பேரும் விடுதலைப் புலிகள் என்று சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.