இந்தியாவுக்கான கனடா தூதராக ஜோசப் கரோன் நியமிக்கப்பட்டுள்ளார். டேவிட் மெலோனைத் தொடர்ந்து கரோன் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கனடா அயலுறவு விவகாரத் துறை அமைச்சர் டேவிட் எமர்சன் இன்று அறிவித்துள்ளார்.
கடந்த 1972ஆம் ஆண்டு வர்த்தக ஆணையர் சேவையில் இணைந்த கரோன், செய்கோன் (வியட்நாம்) மற்றும் அங்காரா (துருக்கி) போன்ற நாடுகளில் பணிபுரிந்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள கனடா தூதரகத்தில் மூன்று முறை தொடர்ந்து பணியாற்றியுள்ளார்.
சீனாவுக்கான கனடா தூதராகவும், ஜப்பானுக்கான கனடா தூதராகவும் கரோன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள கரோனுக்கு, மெய்ஜி ககுயின் பல்கலைக் கழகம் 2008 ஆம் ஆண்டு கவுரவ முனைவர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. இவருக்கு கம்ரு கரோன் என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.