அமெரிக்கா- பாகிஸ்தான் இடையேயான நெருக்கமான உறவு தொடர்ந்து நீடிக்கும் என்றும் தலீபான், அல்-கய்டா இயக்கங்களுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து போராடும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
"பாகிஸ்தானுடனான எங்களது உறவு உறுதியான ஒன்று. தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இது ஒரு முக்கியமான கூட்டணியாகும். நாங்கள் பாகிஸ்தானுடன் தொடர்ந்து பணியாற்றுவோம். இது ஒரு சாதாரணமான நிலையல்ல" என்று அமெரிக்க செய்தி தொடர்பாளர் ராபர்ட் உட் கூறியுள்ளார்.
"பாகிஸ்தான் அரசுக்கு தலீபான், அல்-கய்டா தீவிரவாத இயக்கங்கள் மிகவும் ஆபத்தான வகையில் மிரட்டல் விடுத்துள்ளது. எங்களுக்கும் அதே மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த தீவிரவாத இயக்கங்களை தோற்கடிக்க எங்கள் ஒத்துழைப்பை அதிகரிக்க தேவையான வழிகளை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தீவிரவாத இயக்கங்கள் பாகிஸ்தானில் மட்டுமில்லாமல் ஆப்பானிஸ்தானிலும் செயல்பட்டு வருகின்றன" என்று கூறினார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் பாகிஸ்தானின் எல்லைப்புற கிராமத்தில் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 20 பேர் பலியானார்கள். இது பற்றி பேச அவர் மறுத்துவிட்டார்.