Publish Date: Thu, 04 Sep 2008 (11:08 IST)
Updated Date: Thu, 04 Sep 2008 (11:07 IST)
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 50 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். வன்னேரிக்கும் அக்காராயனுக்கும் இடையில் சிறிலங்கப் படையினர் மேற்கொண்ட இருமுனை முன்நகர்வு முயற்சிக்கு எதிராகத் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 30 க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 50 க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளதாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
நேற்று அதிகாலை 5.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடந்த இந்தக் கடும் மோதலில் பலியான 10 படையினரின் சடலங்களையும், படையினர் விட்டுச்சென்ற பெருமளவிலான ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் மீட்டுள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
இதற்கிடையில், இந்த மோதலில் விடுதலைப் புலிகள் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கா ராணுவ இணைய தளம் தெரிவிக்கிறது.