மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.0 ஆக பதிவாகியுள்ளது.
தஜிகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம், அந்நாட்டு நேரப்படி அதிகாலை 4.30 மணியளவில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலநடுக்கப் பகுதியில் இருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள துஷான்பே நகரிலும் சிறு அதிர்வு உணரப்பட்டதாக அந்நாட்டில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.