Newsworld News International 0809 01 1080901023_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தீவிரவாதிகள் தாக்குதல்: பாக். வீரர்கள் 7 பேர் பலி!

Advertiesment
இஸ்லாமாபாத் பாகிஸ்தான் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் கோஹத் சுரங்கப்பாதை தலிபான்
, திங்கள், 1 செப்டம்பர் 2008 (13:11 IST)
பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள கோஹத் சுரங்கப்பாதையில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த 7 வீரர்கள் உயிரிழந்தனர்.

அந்நாட்டு தொலைக்காட்சி சேனலில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கோஹத் சுரங்கப் பாதையில் இருந்து ராணுவ நிலைகளுக்கு செல்வதற்காக வாகனங்களில் பயணித்துக் கொண்டிருந்த ராணுவ் வீரர்கள் மீது தலிபான் தீவிரவாதிகள் மறைந்திருந்து அதிரடியாக இன்று தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன் கோஹத் சுரங்கப் பாதைக்கு அருகே அமைக்கப்பட்டிருந்து ராணுவ நிலையின் மீது தலிபான் தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்கல் நடத்தினாலும், அது முழுமையாக செயல்படுத்தப்படாத நிலையில், இன்று ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் தலிபான் தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையை பாகிஸ்தான் ராணுவம் துவக்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil