Publish Date: Sat, 30 Aug 2008 (16:02 IST)
Updated Date: Sat, 30 Aug 2008 (16:02 IST)
சிறிலங்கா தலைநகர் கொழும்புவில் நடந்த குண்டுவெடிப்பில் 45 பேர் காயமடைந்துள்ளனர்.
பெட்டா என்ற இடத்தில் இன்று மதியம் 12.45 மணியளவில் இந்தக் குண்டுவெடிப்பு நடந்ததாகக் காவல்துறையினரும், காயமடைந்தவர்கள் பலர் கவலைக்கிடமாக இருப்பதாக கொழும்பு மருத்துவமனை வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.
காவல்துறையினரின் முதல்கட்ட ஆய்வில், வெடித்தது கையெறி குண்டு வகையைச் சேர்ந்த குண்டாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளதாகத் தமிழ்நெட் இணைய தளம் தெரிவிக்கிறது.