Publish Date: Fri, 29 Aug 2008 (13:22 IST)
Updated Date: Fri, 29 Aug 2008 (13:21 IST)
இலங்கையில் சிறிலங்கப் படையினரின் ஆழ ஊடுருவும் படையினர் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் பொது மக்கள் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வன்னியில் ஒலுமடு என்ற இடத்தில் நேற்று மாலை சிறிலங்கப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் அடுத்தடுத்து நடத்திய 4 கண்ணிவெடித் தாக்குதல்களில், 15 வயதுச் சிறுவன் ஒருவனும், 33 வயதான காய்கறி வியாபாரி ஒருவரும் கொல்லப்பட்டனர்.
இவர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நெடுங்கி என்ற இடத்திலிருந்து, வன்னியில் தாங்கள் வசிக்கும் புதுக்குடியிருப்பு என்ற இடத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது, தாக்குதலில் சிக்கியுள்ளனர் என்று தமிழ்நெட் இணைய தளம் கூறுகிறது.
கொல்லப்பட்ட சிறுவனின் பெயர் சுகிர்தன் என்றும், வியாபாரியின் பெயர் சந்திரன் என்றும் தெரியவந்துள்ளதாக தமிழீழ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.