Publish Date: Thu, 28 Aug 2008 (11:28 IST)
Updated Date: Thu, 28 Aug 2008 (11:28 IST)
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் கைதிகளை ஏற்றிச் சென்ற காவல் துறை வாகனத்தை குறிவைத்து இன்று நடத்தப்பட்ட வெடி குண்டு தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
பன்னு என்னுமிடத்தில் பாலத்துக்கு அருகே, சிறையில் இருந்து கைதிகளை ஏற்றிக் கொண்டு நீதிமன்றத்துக்கு இந்த காவல் துறை வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தில் பேருந்து வெடித்துச் சிதறியது.
இந்த சம்பவத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் கைதிகளுக்கு பாதுகாப்பாக வந்த காவல் துறையினரே என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.