Publish Date: Thu, 28 Aug 2008 (10:50 IST)
Updated Date: Thu, 28 Aug 2008 (10:49 IST)
கிழக்கு சீனாவின் ஜியாங்சூ மாகாணத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விழுந்ததில் அதில் பயணம் செய்த 11 பேர் பலியானார்கள். மேலும் 31 பேர் படுகாயமடைந்தனர்.
யாங்சூ நகர் அருகே இந்த பேருந்து வந்து கொண்டிருந்த போது, பேருந்தின் முன்பக்க வலதுபுற டயர் திடீர் என வெடித்தது. இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஓடியது.
இதையடுத்து ஆற்றுப் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த அந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து மூழ்கியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 11 பேர் பலியானார்கள். மேலும் 31 பேர் படுகாயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.