ஸ்பெயினின் மாட்ரிட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஓடு பாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்ததில் 153 பேர் உடல் கருகி பலியானார்கள்.
தலைநகர் மாட்ரிட் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று ஒரு ஜெட் விமானம் மேற்கு ஆப்பிரிக்கா நாட்டின் கனாரியா தீவில் உள்ள லாஸ் பால்மாஸ் என்ற இடத்துக்கு புறப்பட்டது.
அந்த விமானத்தில் 172 பேர் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட உடனேயே ஓடுபாதையில் இருந்து விலகி ஓடியது. இதனால் மேலே எழும்ப முடியாமல் விமானம் தரையில் மோதி உடைந்து தீப்பிடித்து எரிந்தது.
இதையடுத்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் ஆதற்குள் விமானத்தல் இருந்த 143 பேர் உடல் கருகி இறந்தனர்.
விமானத்தில் இருந்த மற்றவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். இவர்களில் சிலரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.