அல்ஜீரியாவின் கிழக்கு பகுதியில் இன்று நடத்தப்பட்ட 2 தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 11 பேர் உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு வானொலியில் அறிவிக்கப்பட்ட செய்தியில், அல்ஜீரியன் நகரில் உள்ள பிரபல உணவு விடுதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் பேருந்து மீது இன்று அதிகாலை காரில் வந்த தற்கொலைத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டு உள்ளது.
இரண்டாவது தற்கொலைத் தாக்குதல் அல்ஜீரிஸில் இருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள ராணுவ தலைமையகமான பொயுராவில் நடத்தப்பட்டுள்ளது.
இந்த இரு தாக்குதலிலும் மொத்தம் 11 பேர் உயிரிழந்ததாகவும், 31 பேர் காயமடைந்ததாகவும் முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.
அந்நாட்டின் பவுமெர்டிஸ் மாவட்டத்தில் உள்ள காவலர் பயிற்சி மையத்தின் மீது நேற்று அதிகாலை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 43 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று 2 இடங்களிள் மீண்டும் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.