Publish Date: Tue, 19 Aug 2008 (17:22 IST)
Updated Date: Tue, 19 Aug 2008 (17:22 IST)
அல்ஜீரியாவின் பவுமெர்டிஸ் மாவட்டத்தில் உள்ள காவலர் பயிற்சி மையத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள குறிப்பில், தலைநகர் அல்ஜீரிஸில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள லெஸ் இஸ்செர்ஸ் பகுதியில் உள்ள காவலர் பயிற்சி மையத்திற்கு இன்று அதிகாலை காரில் வந்த தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இதில் 43 பேர் பலியானதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. இதில் காயமடைந்த 38 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.