Publish Date: Mon, 18 Aug 2008 (14:33 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:09 IST)
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 11 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டை குஞ்சுக்குளத்தில் நேற்று சிறிலங்கப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வினைத் தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர்.
முற்பகல் முதல் மாலை வரை நீடித்த இந்த மோதலில் 11 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 19 பேர் காயமடைந்துள்ளனர் என்று புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
இந்த மோதல் குறித்து சிறிலங்கப் படைத் தரப்பில் இருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் தரப்படவில்லை.