Publish Date: Sat, 16 Aug 2008 (18:09 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:09 IST)
இந்தோனேஷியாவின் லாம்புங் மாகாணத்தில் இன்று காலை பயணிகள் ரயிலும், நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதியதில் 8 பேர் பலியானார்கள். மேலும் 60 பேர் படுகாயமடைந்தனர்.
கிட்டத்தட்ட 300 பயணிகளுடன் வந்த லிமெக்ஸ் ஸ்ரீவிஜயா என்ற இந்த பயணிகள் ரயில், சரக்கு ரயிலின் மீது வேகமாக மோதியது. இதில் பயணிகள் ரயிலின் பல்வேறு பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த விபத்தில் 8 பேர் பலியானார்கள் மேலும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று ரயில்வே செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேக் பிரச்சினையா அல்லது தடம் மாறி வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதா உள்பட பல்வேறு கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.