Publish Date: Wed, 13 Aug 2008 (11:21 IST)
Updated Date: Wed, 13 Aug 2008 (11:20 IST)
சீனாவின் வடமேற்கு பகுதியான ஜிஞ்ஜியாங் என்னுமிடத்தில் வேகமாக திரும்பிய பேருந்து தலைகுப்புற கவிழ்ந்ததில், பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் உள்பட 24 பேர் பலியானார்கள்.
உயர்நிலைப் பள்ளி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உடல் பரிசோதனை மருத்துவ முகாமுக்கு தங்களது பெற்றோர்களுடன் சென்று கொண்டிருந்ததாகவும் அப்போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் பலியானவர்களில் பெரும்பாலேனோர் மாணவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து தகவலறிந்த அப்பகுதி மக்களும், உயரதிகாரிகளும் அங்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.