பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் இன்று பாகிஸ்தான் விமானப்படைக்குச் சொந்தமான பேருந்தை இலக்காக வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் பலியானார்கள். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர்.
பெஷாவர் நகரத்துக்கு வெளியே உள்ள ஒரு பாலத்தில் இந்த பேருந்து சென்று கொண்டிருந்த பாலத்துக்கு கீழே வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததாக நேரில் பார்த்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டு வெடித்த இடத்தில் இருந்து 13 சடலங்களும், மேலும் 11 பேர் படுகாயத்துடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சுவதாகவும் காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த குண்டு வெடிப்பையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.