Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தெற்கு ஓஸ்டியாவில் இருந்து ஜார்ஜியா படைகள் வெளியேற்றம்!

Advertiesment
தெற்கு ஓஸ்டியாவில் இருந்து ஜார்ஜியா படைகள் வெளியேற்றம்!
, ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2008 (17:18 IST)
ரஷ்யாவின் கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து தெற்கு ஓஸ்டியாவில் இருந்து ார்ஜியா படைகள் இன்று வெளியேறின.

டிஸ்கின்வாலியில் இருந்து தங்களது நிலைகளை வேறு இடத்துக்கு ஜார்ஜிய படைகள் மாற்றிக் கொண்டாலும் தெற்கு ஒசீட்டியாவில் தொடர்ந்து படைகள் இருந்து வருவதாக ஜார்ஜியா அமைச்சர் தெமுர் யாகோபஷ்விலி கூறி உள்ளார்.

தெற்கு ஒசீட்டியா தலைநகர் டிஸ்கின்வாலியில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற மனித நேய அடிப்படையில் தங்களபடைகள் திரும்பப் பெறப்பட்டதாக அவர் தெரிவித்து உள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் தெற்கு ஒசீட்டியாவில் ஜார்ஜியா-ரஷ்யா படைகளுக்கு இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. ரஷ்யாவின் கடுமையான தாக்குதலை சமாளிக்க முடியாததால் ஜார்ஜிய படைகள் டிஸ்கின்வாலியில் இருந்து வெளியேறியதாஜார்ஜியாவின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலெக்ஸாண்டர் லோமையா கூறியுள்ளார்.

அதேநேரத்தில் இரவுபகலாக தொடர்ந்து சண்டை கொண்டிருப்பதாக மற்றொரு ரஷ்ய அதிகாரியான ஜெனரல் மாரட் குலக்மேடோவ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜார்ஜியாவில் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள தெற்கு ஒசீட்டியாவில் உள்ள தனிநாடு கோரும் பிரிவினைவாதிகள் மீது ஜார்ஜியா ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து தங்களது ராணுவத்தைச் சேர்ந்தவர்களை ஜார்ஜியா படையினர் கொன்று விட்டதாகக் கூறி அவர்கள் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது. தெற்கு ஒசீட்டியா தலைநகர் டிஸ்கின்வாலி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜார்ஜியாவுடன் சமீபகாலமாக அமெரிக்கா நட்புறவு கொண்டிருப்பதால், தெற்கு ஒசீட்டியா பிரிவினைவாதிகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருவதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil