ஜார்ஜியா நாட்டின் தெற்கு ஒசெசியா மாகாணத்தின் மீதான தாக்குதலை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
ஜார்ஜியாவின் மூன்று ராணுவ நிலைகள், மற்ற முக்கிய கிடங்குகள் மீது ரஷ்ய விமானப்படை வெடி குண்டுகளை வீசியது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள அமெரிக்கா, "ஜார்ஜியா மீதான விமான, பீரங்கி தாக்குதலை ரஷ்யா உடனே நிறுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளது.
"எல்லை அமைதிக்கு மதிப்பு கொடுத்து ஜார்ஜியா மண்ணில் இருந்து தனது படைகளை ரஷ்யா உடனடியாக வாபஸ் பெற வேண்டும்" என்று அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் நேற்று பேசிய அவர், பன்னாட்டு அமைதித் தூதரை அனுப்பி சண்டையை நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.