நேபாளத் தலைநகர் காத்மண்டில் உள்ள சீன தூதரகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 1,100 க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள காத்மண்டின் புறநகர் பகுதியில் உள்ள இந்த அலுவலகம் முன்பு ஏராளமான பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
அப்போது அவர்கள் சீன அரசுக் எதிராக, 'சீனா திருடன்', 'எங்கள் நாட்டை விட்டு விடு', 'திபெத்தில் கொலை செய்வதை நிறுத்து' என்று கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் அலுவலகத்தை தாக்க முயன்றதாகவும், தடையை மீறியதாகவும் கூறி கைது செய்யப்பட்டனர்.
சீனத் தலைநகர் பீஜிங்கில் இன்று ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், சீனாவுக்கு எதிராக நேபாளத்தில் திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.