அதிபர் பதவியில் இருந்து முஷாரஃப்பை பதவி நீக்க பாகிஸ்தான் ஆளும் கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளதைத் தொடர்ந்து, பீஜிங்கில் இன்று நடக்கும் ஒலிம்பிக் துவக்க விழாவில் பிரதமர் கிலானி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு அயலுறவு அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டில் நடந்து வரும் அரசியல் திருப்பங்கள் காரணமாக பீஜிங் செல்ல இருந்த பயணத்தை அதிபர் முஷாரஃப் ரத்து செய்துள்ளதாகவும், அவருக்கு பதிலாக பிரதமர் யூசுப் ரஸா கிலானி பாகிஸ்தான் சார்பில் ஒலிம்பிக் துவக்க விழாவில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீஜிங்கில் இன்று மாலை துவங்கும் ஒலிம்பிக் துவக்க விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், இந்தியாவில் இருந்து சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் சீனா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.