ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் பங்கேற்பதற்காக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பீஜிங் சென்றடைந்தார்.
அவருடன் மகனும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, மகள் பிரியங்கா, மருமகன் ராபர்ட் வதேரா, பேரக் குழந்தைகள் இருவர் ஆகியோரும் உடன் வந்தனர்.
பீஜிங்கில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும் சோனியா காந்தி, சீன துணை அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்திக்கிறார்.
பீஜிங்கில் உள்ள 'பறவைகளின் கூடு' விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை ஒலிம்பிக் தொடக்க விழா நடக்கிறது. இதில் 80க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.