பிரான்ஸ் நாட்டுக்கு 11 நாள் சுற்றுப் பயணமாக அடுத்த வாரம் செல்லும் புத்தமதத் தலைவர் தலாய் லாமா, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் சர்கோஸியைச் சந்திக்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டு அதிபர் மாளிகை அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "புத்தமதத் தலைவர் தலாய் லாமா பிரான்ஸ் நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் 11 நாள் சுற்றுப்பயணத்தின் போது அதிபர் நிக்கோலஸ் சர்க்கோஸியை சந்திக்க அனுமதி கேட்கவிலலை" என்று கூறப்பட்டுள்ளது.
திபெத் நாட்டின் மீது சீனாவின் அடக்குமுறையை எதிர்த்து, ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவை புறக்கணிக்கப் போவதாக பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்க்கோஸி கூறியிருந்தார்.
பின்னர், சீனாவில் நாளை நடக்க உள்ள துவக்க விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் சர்கோஸியைச் சந்திக்கத் தலாய் லாமா விரும்பாமல் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.