மேற்கு நேபாளத்தில் உள்ள ஒரு மலைக் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் புதையுண்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியானார்கள்.
தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'அம்கோட்' என்ற கிராமத்தில் நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவட்ட தலைநகரில் இருந்த 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்துக்கு நடந்துதான் செல்ல வேணடும் என்பதால் மீட்பு குழுவினர் இன்று காலை தான் அங்கு சென்றடைவார்கள் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் மழைக் காலத்தில் நிலச்சரிவு என்பது வழக்கமாக ஒன்றாகிவிட்டது.