இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் சிறிலங்கப் படையினர் 23 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 4 பேர் படுகாயமடைந்து உள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தாராவி பகுதியில் உள்ள பெரியவடவான் என்ற இடத்தில் நேற்று (செவ்வாய்க் கிழமை) மாலை 6.30 மணியளவில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் சிறிலங்கப் படையினர் 23 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 4 பேர் படுகாயமடைந்து உள்ளதாக தமிழ்நெட் இணைய தளம் தெரிவிக்கிறது.
கடந்த ஒரு வருடத்தில் தொப்பிக்கல் பகுதியில் சிறிலங்கப் படையினருக்கு எதிராக நடந்துள்ள மிகப்பெரிய தாக்குதல் இதுதான் என்றும் அச்செய்தி கூறுகிறது.
இருந்தாலும், இத்தாக்குதலில் ஒரு படையினர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளதாகவும், 3 பேர் படுகாயமடைந்து உள்ளதாகவும் கொழும்பில் உள்ள பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் சிக்கிய சிறிலங்கப் படையினர் டிரக்கில் பயணித்துக்கொண்டு இருந்துள்ளனர்.